.............சில்லறை யுத்தம்............

குலுக்கப்பட்ட சில்லறைகளின் சப்தம்,
உலுக்கத் தவறவில்லை !
கண்டும்காணாமல் கடவுளை,
கானப்போன மனதை !
சுருக்கங்களுக்குள் கிடந்த,
குத்தவைத்த முதியவனின் முகத்தில்,
எத்தனை ஆயிரம் விரத்திக்கோடுகள் !
அவனுக்கு பெரிய எதிர்பார்ப்பில்லை !
ஏமாற்றி கடந்துவந்த உணர்வு எனக்கு !
தற்போது என்னவரம் கேட்கட்டும் என்பதைவிட !
என்ன செய்வேன் பதறவைக்கும் மனதை,
அவனை கடக்கும் நொடிகளில்?
முதியவன் கவனிப்பாரற்றவனா எங்கேயும்?
அந்த சில்லறை சப்தம் சம்மட்டி அடி !
எனது இயலாத மனச்சாட்சிக்கு !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (15-Apr-13, 8:13 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 70

மேலே