ஆத்திரம்.... வேளை
மனதில் ஈரம் கசிய
மன்னிப்பு சொல் இருள் சூழ
மனிதம் சாகடிக்கப் பட்டது....
மண்புழுவாய் நசுக்கப்பட்ட வேளை...!!....
இதயத்தின் இரக்கம்
இரும்பாய் இறுகியது....
இன்னல் எல்லை மீறி
இடர் தொடர்ந்த வேளை...!!...
அன்பு எனும் அக உலகில்
அருமை மகிழ்வு வெறுமையானது....
அடக்க முடியாமல் அளவுமீறி
ஆத்திரம் மனதில் கொப்பளித்த வேளை..!!...
--- நாகினி