ஈழத் தமிழனுக்கு வாழ தனி ஈழம் வேண்டும்

மனிதனாய் பிறத்தல் அரிது - இல்லை இல்லை
பிறவாமல் இருப்பதே அரிது ....

நான் பிறந்த தமிழ் மண்ணின் குணமா - இல்லை
நான் இழந்த என் தாயின் குற்றமா ?

பொறுத்து பொறுத்து பூமி ஆழ வில்லை
நாங்கள் அழுகிறோம் - பூமிக்காக ...

உண்ண உணவு வேண்டாம் - உடுத்த
உடையும் வேண்டாம் ..

உடுத்திய உடையை அவிழ்க்காமல்
இருக்க தனி ஈழம் வேண்டும்

மானம் கடலினும் பெரிது - வேண்டாம்
தமிழினம் அததினும் பெரிது

எங்களை அழித்து (கொள்ளுங்கள்) விட்டீர்கள்
இளைய தமிழினத்தை வாழ விடுங்கள்

ஈழத் தமிழனுக்கு இரங்கல் செய்தி
தினசரி செய்தி ஆகாமல் இருக்க

ஈழதமிழனுக்கு தனி ஈழம் வேண்டும்
வாழ தமிழனுக்கு ஈழம் தனி வேண்டும்

எழுதியவர் : நெல்லை பாரதி (15-Apr-13, 8:42 pm)
பார்வை : 129

மேலே