வாங்க சிரிக்கலாம்!!

குழந்தையேன் சிரிக்கிறது?
குதுகலமாகிச் சிரிக்கிறதா?
தன்னைத்தானேதான்
உற்சாகமூட்டிடும்
அனிச்சச் செயலது..

உற்சாகந்தான் மனிதர்க்கு
ஊக்கமூட்டும் மருந்தாகும்..
நோய்களெதிர்க்கும்
தடுப்பு மருந்துதாம்
சிரிப்பென்பது..

சிரிப்பென்பது சேமிக்கல்ல
சிக்கனமில்லை சிரிப்புக்கு.
இறுக்கந் தொலைக்கும்
அருமருந்தாம்
சிரிப்பென்பது.

செலவழித்தால் சிரிப்பினை.
வரவெடுக்கலாம் வாழ்வினை.,
தீயகுணங்கள் தீர்த்திடும்
திவ்யமருந்தாம்
சிரிப்பென்பது.

முகத்திலழகு ஒளியூட்டும்
அகத்திலன்பு மொழியேற்றும்.
இனிக்கத்தானே இதயமே
ஏற்றமருந்தாம்
சிரிப்பென்பது.


கவிஞர்.கொ.பெ.பிச்சையா..

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா.. (15-Apr-13, 5:42 pm)
பார்வை : 193

மேலே