அப்பா

அறிவுரை கூறியொரு தெளிவுரை தந்தாய்
அறியாத செய்திபல அறிந்திட செய்தாய்
நம்பிக்கை என்றஒரு நற்பண்பு ஊட்டி
நலமான வாழ்வொன்றை எமக்கிங்கு ஈன்றாய்
தவறான பாதையிலே நானிங்கு சென்றாலும்
நகைப்போடு சுட்டியதை சரிவரச் செய்தாய்
புட்டிஎன்ற பெண்ணொருத்தி உன்னோடு இருந்ததாலோ
அவள்வாசம் எனக்கின்று வெறுப்பாக மாறியதே
தந்தையென்ற வார்த்தைக்கொரு தலைமைதேடி தந்தவனே
விந்தயெங்கும் தேடினாலும் உன்போல எவருமுண்டோ
நீபேசும் வார்த்தைகளை தமிழ்ஏட்டில் தேடுகிறேன்
விழியெல்லாம் மழைத்துளிகள் காணாமல் அதையிங்கு
என்வழி நல்வழியாய் இருக்கவா உன்னைக்கெடுத்தாய்
நெஞ்சம் கசிந்தது அழுவதைஏன் தடுத்தாய்
கடவுளென்ற உருவமதை உன்வடிவில் காணுகிறேன்
உன்னினிய அன்புமதை நெஞ்சோடு பேணுகிறேன்
சுமைதாங்கி போல்தினமும் எமயிங்கு தாங்குகிறாய்
என்பார்வை போனபின்பு நீயுமிங்கு தூங்குகிறாய்
என்தவம் செய்தேனோ உனையிங்கு பெற்றிடவே
உன்பாதம் தாங்கவொரு வரமொன்று வேண்டுகிறேன்

எழுதியவர் : Leenus (15-Apr-13, 4:02 pm)
பார்வை : 122

மேலே