ஊமை உலகம் உருவாகட்டும்

உயிரினங்கள் உணர்வைப் பரிமாற்ற
ஒலி எழுப்புகின்றன ..
மனித உயிரனங்கள் அதற்க்கு மொழி
என்று பெயரிட்டன...
மனிதம் மறந்து மொழிப்பற்று என்று
காசுக்காய் கட்சிக்காய் ஒரு பெருங்கூட்டம்
வளர்ந்தது ..!
பண்க்காகிதம் தின்னும் பன்றிகளின்
காலடியில் சிக்கி சிதைந்தன மழலை மொழி
பேசும் மனித பிஞ்சுகள்...
இறைவா மொழிதான் மனிதனை பிரித்து
மனித உயிரையும் பிரிக்கிரதென்றால்
ஊமையாய் எனக்கு குழைந்தை கொடு...

எழுதியவர் : சுதந்திரம் (15-Apr-13, 3:42 pm)
பார்வை : 176

மேலே