ஹைக்கூ - கே.எஸ்.கலை

இயற்கை
செழிப்பாக இருக்கிறது
கணினித் திரைகளில் !

காடழிப்பு-
எதிராக வேலை நிறுத்தம்
மழை !

கிழக்கில் சூரியன்
சிவப்பாய் - மீனவன் ரத்தத்தில்
குளிப்பு !!!

விஷம்-
நுரை தள்ளுகிறது
கடல் !

பாலைநிலம்
ஈரமாகும் – பணியாட்களின்
வியர்வையும் கண்ணீரும் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (17-Apr-13, 11:18 am)
பார்வை : 643

மேலே