...............அதே தனிமை..............

பிடுங்கிச் சென்ற எதையும்,
திரும்பத் தரவேண்டாம் !
அதுவெல்லாம்,
உன்னால் எனக்குக்கிடைத்தவை !
உனது நிழலையே ஓயாமல் துதித்தவை !
நீ போனபிறகு ஒருவேளை வைத்திருப்பின் !
நன்றிகெட்டவனாகலாம் நான் !
போனவரை சரிதான் !
ஆனாலும் என்னிடமே பத்திரமாய் !
நீ வருதற்கு முன்னிருந்த "அதே தனிமை"

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (21-Apr-13, 7:29 pm)
பார்வை : 69

மேலே