இப்ப என்ன பதில் சொல்ல போகிறாய் நீ !!!!

நளினமும் மெல்லினமும் உன்னழகென்று
வர்ணித்து மணமுடித்தாய் !

உன்னையும் என்னயும் பிரித்திடும்
ஓர் உயிர் உலகில் உண்டோ என்றாய் !

படித்திருந்த பாய்கள் பழைய தாகுமுன்
பிள்ளை வேண்டுமென்று பரிதவித்தே

பாசாங்கு உன் அம்மாவிடம் பணிந்தே
மறுமணம் புரிந்தாய் - பேதையாக்கி என்னை

குழந்தை கிடைத்த கூதுகலத்தில் - என்னை
வஞ்சித்து விரட்டினாய் உன் சகுனியுடன்

அல்லலுற்ற என்னை அணைத்த ஏழை - இவன்
பன்னிரு பருவமாய் பக்குவம் பார்த்து

இவன் எனக்கு கொடுத்த
இவ்விரண்டு குழந்தைக்கு இப்ப என்ன
பதில் சொல்ல போகிறாய் நீ !!!!

எழுதியவர் : நெல்லை பாரதி (22-Apr-13, 2:34 pm)
பார்வை : 115

மேலே