நீ வருவாயென !
நீ வருவாயென ! காதல் கவிதை
காற்றைத் தூது விட்டேன் ,
கண்ணே உன் சுவாசமாகிவிட.
கனவைத் தூது விட்டேன்
பெண்ணே உன் தூக்கமாகிவிட !
துக்கத்தைத் தூது விடுகிறேன், உன் பக்கத்தில்
நீ கசக்கிப் போட்ட காகிதமாகவாவது கிடக்க !..
என்னை தொலைத்தவளே!
இன்னும் என்னில் சந்தேகங்கள் நிலைக்க
- நீ வருவாயென ! -
கண்மணியே !
உன் பகலில் என் இரவைத் தேடுகிறேன்
என் பகலில் உன் இரவைத் தொலைத்து விட்டு !

