எனக்கு மட்டும் ஏன் இப்படி ?
ஒன்றே போதுமென்று கருக்கலைக்க
நினைத்தாளாம் என் தாய்
மருந்து குடித்தும் மாற்றமில்லை
வளர்கருவில்
பிறந்து விட்டேன் சுகப்பிறப்பாய்
என் வாழ்வில் சுகமென்ற ஓன்று அதுவே ..☺
பிறந்தாலும் பிழைக்காது ...ஜாதகம் சொன்னது ..
முரணாய் வளர்ந்தேன் ஜாதகமும் பொய்யானது
என் வாழ்வில் ..
படிப்பில் மட்டு படித்த வகுப்பும் எட்டு
உலகம் எனக்கு அறிவு புகட்ட
படாத பாடு படுத்தியது
படிக்கும் வயதில் நடிக்க கற்றுக்கொண்டேன்
வாழ்க்கை நாடகத்தில்
உழைக்க கற்றுகொண்டேன்
உற்றாருக்காக
பேசகற்றுக்கொண்டேன்
சுற்றாருக்காக
அறியா வயதில்
புரியா காதல் கொண்டேன்
பெண்ணவள் மேதை
நானோ பேதை
பசப்பாய் பழகினாள்
பணத்தால் பழகினாள் ஒரு நாள்
கசப்பாய் பேசினால்
படிப்பில்லை என்று காரணம் சொன்னாள்
மரண வலி கண்டது இதயம்
மாற்றான் மனைவியானால் மதிகெட்டு
மயக்க பேசினாள் மயக்கமாய் பேசினாள்
மயங்கவில்லை நான் தயங்கைல்லை தட்டி கழிக்க
நாட்கள் நகர்ந்தது அவள் வாழ்க்கை தகர்ந்தது
நடத்தை சரியில்லை என்று ஊரார் சொன்னார்கள்
வீட்டை கட்டிப்பார் கல்யாணம் கட்டிப்பார்
என்றார்கள்
இரண்டையும் பார்த்தேன்
இரண்டுமே என்னை இன்றுவரை கடன்கரனாய்
மாற்றி வைத்திருகிறது
தொடரட்டுமா என் வாழ்க்கை க[வி]தையை .....