புண்ணியமான புளியமரம்

பச்சைபசேல் என்று
பரட்டை தலையோடு
கம்பீரமாய் பறந்து விரிந்து
ஊர் முழுதும் நிறைந்திருக்கு
புளியமரங்கள் .......

கொத்து கொத்தாய் காய் காய்க்கும்
காய் கடிக்க வாய் புளிக்கும்
சுட்டு தின்றால் சுவை கொடுக்கும்
நெட்ட நெடு வளர்ந்து நிற்கும் மரம் இது ..........

ஆடுகளுக்கு உணவாகும்
அதன் தழையோ மருந்தாகும்
கொழுந்து இலையை பறித்து தின்றால்
எச்சில் ஊரும் வாய் நிறைய .....

கிளைகள் இங்கே ஊஞ்சலாகும்
மர நிழலோ வீடாகும்
ஒரு மரத்தின் வருமானம்
ஒரு வயித்துக்கு சோறு போடும் .......

சித்திரையில் பழம் பழுக்கும்
ஊர் முழுக்க புளி கொடுக்கும்
ஒற்றுமையோடு பகிர்ந்துகொண்டு
உண்டு வாழும் ஊர் மக்கள் .......

அறுவடை முடிந்ததும்
பள்ளி விடுமுறை தொடங்கிடும்
எங்கிருக்கும் குழந்தைகளும்
இந்த இடத்தை தேடி வரும் ......

ஆட்டமும் பாட்டும்
ஊஞ்சல் விளையாட்டும்
கண்ணாம்பூச்சி ஆட்டமும்
களைகட்டும் நாள் முழுதும் ........

பொழுது சாயும் வேளையிலே
பிள்ளை எல்லாம் ஓடிவிடும்
கூட்டங்களால் நிறைந்த இடம்
வெறிச்சோடி காணப்படும் .......

மரமில்லாமல் மனிதனில்லை
மகத்துவம் கொண்ட மரம் தன்னை
மக்கள் நாம் போற்றிடுவோம்
மனிதனோடு வளர்த்திடுவோம் .......

எழுதியவர் : வினாயகமுருகன் (24-Apr-13, 8:04 pm)
பார்வை : 112

மேலே