குவாக் குவாக் குவாக் குவாக்......!
கால்களை அசைத்த போது
நீந்தப் பழகினேன்
கண்களை திறந்த போது
வாழப் பழகினேன்
வெண்மையை உணர்ந்தபோது
சுத்தம் பழகினேன் - விபரமில்லா
மனிதனைக் கண்டபோது
சிறையை பழகினேன்.....!
இருப்பினும்
இதோ சிறைக்குள்....
ஒற்றுமையாய்
ஒரே தொனியில் கத்தியபடி.....
குவாக் குவாக் குவாக் குவாக்......!
எங்களை
வாத்து மடையர்கள் என்று அழைத்து விட்டு....
ஒற்றுமையை மறந்து விட்டு.....
ஓடி அலைகிறார்கள்
தனித் தனியாய்
தனித் தனியாய்
தனித் தனியாய்
மனித மடையர்கள்........!!!!