..................ஈர்க்கிறாய்...............

நீ பார்க்காத நேரங்களில் உன்னோடு,
பவனி வந்துகொண்டுதானிருன்தேன்,
உன் நிழலாய் !
நீ நினைக்காத நிமிடங்களில்,
உன்னோடுதானிருந்தேன்,
உன் தொண்டைக்குழியிறங்கும் எச்சிலாய் !
நீ தீண்டாத மணித்துளிகளில்,
உன்னோடுதானேயிருந்தேன்,
நரகமென எரியும் விரகமாய் !
நீ தூங்காத சமயங்களில்,
உன்னுடனேயே இருந்தேன்,
உன் உறக்கம் பறித்த சாபமாய் !
எனக்கோ..........................!!
எல்லாமுமாய் நீயிருந்தாய் எந்தநேரமும் !
ஐம்பூதங்களின் அர்த்தமாய் !
அதில் ஊசலாடிடும் அற்பமாய் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (25-Apr-13, 7:47 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 80

மேலே