தென்னை மரம்
அன்று
உயிரோடு இருக்கும் வரை
தன்னில் எல்லாவற்றையும்
தந்தது எங்களுக்குக்கு...
இன்று
இறந்த பிறகும்
இன்னும் தருகிறது''
ஆம்;
அடுக்கு மாடி
குடியிருப்பாய்
மாறிப்போனது
அந்த பசைக்கிளிகளுக்கு
என் வீட்டு
காய்ந்துபோன
மொட்டை தென்னைமரம்...