பச்சை கிளி

கொள்ளை கொள்ளும்
பச்சை வண்ணம்
கோவை பழ
மூக்கு வண்ணம் ......

உந்தன் பேச்சு
காது இனிக்கும்
நீ கடிக்க
கனி இனிக்கும் ......

பொந்து போன்ற
உன் கூடு
பொதி சேர்த்து
உன் வீடு ......

நெஞ்சை அல்லும்
அழகி நீ
கொஞ்சும் பொருள்
பெண்ணுக்கு நீ .....

பழம் தின்று பசி மறப்பாய்
கூட்டத்தோடு சேர்ந்திருப்பாய்
உன்னை கொஞ்சா மனிதர் ஏது
உன்னில் இல்லா அழகு ஏது ....

எந்தன் கரம் பற்றிக்கொண்டாய்
எல்லை இல்லை இன்பம் தந்தாய்
இறைவி கையில் நீ நிறைய
இன்றளவில் நீயும் தெய்வமாய் .......

எழுதியவர் : வினாயகமுருகன் (25-Apr-13, 7:49 pm)
Tanglish : pachchai kili
பார்வை : 6885

மேலே