இன்னுமோர் சுதந்திரம் வேண்டும்
புவிஎங்கும் கலியுக கூட்டங்களாச்சு
பாரதம் மறந்து பரதேசம் ஆயாச்சு
பாரதமாதா பொலிவிழந்து போயாச்சு
மது மூழ்கித் தன்னிலை இழந்தாச்சி
தெய்வீகம் வேதங்கள் மாய்ந்தாச்சி
பாரதம் பொய்யிலே புதைந்தாச்சி
சொற்ப செயல்களே தினமும் கண்டோம்
அற்ப மாயைகளோ? ஆனந்த தாண்டவம்
இயல் இசை நாடகம் எங்கே போனது
வான்புகழ் தமிழ்நாடு வசை பாடுது ...
பெண்ணென பிறந்தவள் புண்ணிய பூமியில்
கற்குமுன் கற்பிழந்து போகிறாள் - கயவர்களால்
ஒருவனுகொருத்தி என்ற நல்லறத்தை
நித்தம் காண்பதெல்லாம் பொய்களாச்சி ..
பாரதி கண்ட புதுமை பெண்கள் - வாழ
வழியின்றி வானகம் பார்க்கின்றாள் ..
இன்னுமோர் நிந்தனை செய்வோம் - தமிழை
பண்பாடோடு திரும்ப வந்தனை செய்வோம்
இன்னுமோர் சுதந்திரம் வேண்டும் - இந்த
ஈவு இரக்கமற்ற அரக்கர்களிடமிருந்து .