ஒரு கண்ணியமான கலாரசிகன்.....(ஓவியர் இளையராஜா)

பலநாட்கள் கழித்து
மீண்டும் கவிதை எழுத தூண்டியதொரு ஓவியம்.....

அவன் ஓவியன் என்பதும்,
நான் கவிஞன் என்பது மட்டுமே வித்தியாசம்,
மற்றபடி
அவனும் கவிதையைதான் வரைகிறான்,
அல்லது,
அவன் வரைவது கவிதையாகிறது....

அவன் ஓவியத்தில்,
நிழலில் கூட உயிரை திணித்து காட்டுகிறான்.

தாவணிகளை
சிறகாய்,
பாவாடைகளை
பட்டம்பூசியின் இறகாய்,
உருமாற்றம் செய்கிறது அவன் தூரிகை......

எந்த ஓவியத்தை முகர்ந்து பார்த்தாலும்,
தமிழ் வாடை தெறிக்கிறது...

மவுனத்தின் வேர்களை
ஓவியத்தின் கண்களில்
கிளைபரப்புகிறது அவன் திண்ணம்.....

இறந்தவரை உயிரெழ செய்யும்
லாவகம் கடவுக்கே பரிட்சயம்
என்றால்,
நீனும் கடவுளே,
உயிரற்ற உரல் கூட
குரல் கொண்டு பேசுதுன் ஓவியத்தில்......

உன் ஓவியப்பவைகளை
பார்த்த பின்பு,
கிராமத்தில் பெண்ணெடுக்க
தீர்மானமெடுத்து விட்டேன்....

குமரியவள்
ஒற்றை மயிர் கற்றையின்
நிழலை கூட
பதிவு செய்திருக்கும் நேர்த்தி.....

தமிழன் தொலைத்த
அம்மிக்குலவியையும்,
தமிழினம் தொலைத்த
நாணத்தையும்,
இன்னும் தக்க வைத்திருக்கிறது
உன் ஓவியங்கள்....

உன் ஓவியத்தில் கூட,
எந்த பெண்ணின் மாராப்பும்
கொஞ்சம் கூட விலகியிருக்க வில்லை,
கண்ணியமான கலாரசிகன் நீ....


(திரு.இளையராஜாவின் ஓவியங்களை ஒருமுறை பாருங்கள்)....

---துளசி வேந்தன்

எழுதியவர் : துளசி வேந்தன் (27-Apr-13, 10:24 am)
பார்வை : 254

மேலே