நிம்மதியாக இருக்கிறேன் ..
இப்போதுதான் நான்
நிம்மதியாக இருக்கிறேன் ..
உன் இதயத்தில்
எப்போது
குடிவந்தேனென்று
தெரியாது...
ஆனால்
நான் வந்து விட்டேனென்று
எனக்கு தெரியும்...
எப்படி என்று கேட்கின்றாயா?
உன் கண்கள்
தடுமாற்றத்தோடு
தடம் மாறுவதை
பார்த்து தான்...

