பேஸ் புக்

எதையோ எதிர்பார்த்து
எதையெதையோ இழக்கிறாங்க
எப்படி சொன்னா புரிஞ்சுப்பாங்க----பேஸ் புக்கில் பெண் தோழிகள் .

எப்படியோசொல்றேன் கொஞ்சம்
எதையும் பாக்காம புரிஞ்சிக்கோங்க
எதிர் பாக்காதீங்க எதையும் -- என் கவிதையை

உங்க உழைப்பு உன்னதமானது
உணர்வினூடே கலந்து
உறுதியாய் இருக்கபாருங்க.....(சொல்றதுக்கு நிறைய பேர் இருக்காங்க)

கலைச்சிபோட கட்டாயம்
கல்லுகல்லாய் வருவாங்க
கரைஞ்சிடாதீங்க!------நண்பர்கள் போர்வையில் தீயவர்கள் ( பேஸ் புக்கில் )

காத்தபோல ,கவனமாய் இருங்க
ஆழிக்காத்தாய்! அது
அழிச்சிடும் சரியான தருணத்தில!---- காதல் என்னும் மாயவலை.

வெட்கமும்மில்ல மானமும்மில்ல
அந்த கல்லுக்கு!!------ லொள்ளு வழியும் நண்பர் / நண்பி

சிதறி சின்னாபின்னமாக்கி
சேர்த்தள்ளி கொட்டிவிடு
காத்தாய் இரு!!!!
கவனமாய் இரு!----- அந்தரங்களை பற்றி அலசுபவர்கள் .

எழுதியவர் : தமிழ் செல்வி (27-Apr-13, 8:41 pm)
சேர்த்தது : tamizhselvi
பார்வை : 242

மேலே