காதலும் பொங்கலும்

நாக்கில் படாமல் விழுங்கி விட
காதல் ஒன்றும் லேகியம் அல்ல .
அது அணுஅணுவாய் ரசித்து
கடித்து சுவைத்து சக்கையையும்
சர்க்கரையாக்கும் கரும்பு !!!!!

மறைத்து ஒளித்து மாட்டி வைக்க
வேண்டிய சாவிக் கொத்தல்ல காதல் .
அது கழுத்தைச் சுற்றி கௌரவிக்க
வேண்டிய மஞ்சள் கொத்து !!!!!!

காதல் -அடிக்கடி மாறிப்போகும்
வானிலை அறிவிப்பல்ல .
அது - மங்களகரமான
மாவிலை அணிவகுப்பு !!!!

மொத்தத்தில் காதலும் பொங்கலும்
ஒன்றுதான் .இரண்டுமே இனிப்பாய்
இருப்பதால்.!!!!!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Apr-13, 2:02 pm)
பார்வை : 90

மேலே