ஒரு பழைய திரைக்கனவு....
தடதடவென இதயம்
படபடவென நானும்
திக்திக்கென இருக்கும் போது
விடுவிடுவென
விலகித்தான்
போவாயோ?
சிறுசிறு கொடிமின்னல்
துறுதுறு உன்கண்ணில்
தகதகவென மின்னும் போது
அருகில்தான்
வருவாயோ?
அப்போது உன் காதலை
விழிகள் சொல்லுமா?
இதழ்கள் சொல்லுமா?
பெண்ணே சொல்....
அதையும் உன் வெட்கம் திண்ணுமா?
தித்திக்கும் வார்த்தை யொன்றை
சத்தமாய் சொல்லடியே
மௌனம்தான் என்றானால்
பார்வையில் பேசடியே
கடும் வெயிலாய்
இடி மழையாய்
வேண்டாமடி...
சிறு தூறலாய்
ஒரு தென்றலாய்
என் மனசை அள்ளிப்
போனால் போதும்...
என் கனவை அள்ளித்
திண்றால் போதும்....
போதும் போதும் போதும்....
இம்மென்றால் காதல் வாசம்
வார்த்தையில் சொல்லடியே
காதல் தான் என்றானால்
சுவாசமே நீயடியே
பட்டுத் தெறிக்கும்
விட்டுப் பிடிக்கும்
புரியாதடி....
ஒரு கண்ணசை
சிறு புன்னகை
உன் இமை துடித்து
நின்றால் போதும்
நின் வெட்கத்தை அள்ளித்
திண்பேன் நானே
நானே நானே நானே....