நல்லது செய்தாயடி தோழி
நல்லது செய்தாயடி தோழி!
கருங்கல்லாய் கிடந்த என்னை
சிலையாகச் செய்ததென்ன!
களிமண்ணால் ஆன எனக்கு
உருவமும் தந்ததென்ன!
நல்லது செய்தாயடி தோழி!
விந்தையாம் உலகைக் கண்டு
வியர்த்துப்போய் பதட்டம் கொண்டு
ஓதுங்கிதான் நானிருந்தேன்
உன்னை நான் காணும்முன்னே
நல்லது செய்தாயடி தோழி!
அன்பினால் ஆளவந்தாய்!
அசராமல் பாசம் தந்தாய்!
என் பயம் போக்கி என்னை
எனக்குநீ உணரச்செய்தாய்!
நல்லது செய்தாயடி தோழி!
உன்னாலே விழித்துக்கொண்டேன்!
உணர்வாலே மனிதன் ஆனேன்!
என் அருமை தோழி உன்னை
கடவுளாய் மனதில் கண்டேன்!
நல்லது செய்தாயடி தோழி!