நண்பனே மன்னிக்க வேண்டுகிறேன்

என்னை நினைத்து -நீ
எழுதும் காதல் கவிதைகளுக்கு
பதில் தர தெரியவில்லை-எனக்கு...

வலிகளால் கடந்து வந்த
உன் பாதத்துக்கு
மருந்தாக என் நட்பு
என்றும் உன்னை தொடரும்...

மனிக்க,மறக்க வேண்டுகிறேன்
உன் இதயத்தில் உண்டான
என் நினைவுகளின் காயங்களை...

விடை தெரியா என்
வாழ்வின் கேள்விக்கு பதிலாக
உன் உறவு...

ஏற்க மறுக்கிறது
என் இதயம் ...
காரணம் கேட்காதே....
பதில் தர தெரியவில்லை

உன்னை நட்பாக தொடரவே
துடிக்கிறது என் இதயம்...

உன் வாழ்வின் இன்ப துன்பகளை
நம் வாழ்வின் இறுதி நாள் வரை
பகிருவேன் உன் உயிர் தோழியாக ...

மன்னிக்க வேண்டுகிறேன் தோழனே ...

என் நட்பெனும் காதல்
உன்னை என்றும் தொடரும்...

உறவுகள் ஆயரம் உன்னை
தொடர்தாலும் என் மீது
நீ கொண்ட நேசம் மட்டும் மாறாத வரம்
வேண்டும் உன்னிடம்...

எழுதியவர் : சங்கீதா.k (28-Apr-13, 2:29 pm)
பார்வை : 971

மேலே