வெட்கத்தில் சிரித்தாள்

தினதோறும் தேடினேன்
உந்தன் கால் தடத்தை.
அதில் தெரியாத சுகம் உணர்ந்தேன்
எந்தன் மனப் புறத்தே.
நீ வருவாயா என்று பார்த்திருப்பேன்
நீ வரும் இடத்தே.
எனை அறியாமல் உனை தொடர்வேன்
உன் திசை புறத்தே.
நீ மலர்வாய என்றீருபேன்
உன் இதழ் நனைத்தே!
நீ தெரியாமல் உனை ரசிப்பேன்
என் விழிகள் உறுத்தே.
நாம் பேசுவோமா தெரியாது
பல யுகங்கள் மறைத்தே.
நம் இரு விழியாலே பேசினோம்
மனம் மறைத்தே.
நீ வெட்கத்தில் சிரித்தாயே
உன் தலை குனிந்தே.!

எழுதியவர் : கவிசதிஷ் (6-Apr-10, 2:51 pm)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 1258

மேலே