என் காதல் சொல்ல நேரமில்லை

என் காதல் சொல்ல
உண்மையில் நேரமில்லை
இன்றும் சொல்லாமல் காதலித்துக்
கொண்டிருக்கிறேன் இறுதி
வரை என்னால் சொல்லவும்
முடியாது ஆனால்
இது ஒரு தலைக்
காதலும் இல்லை
இது இரு தலைக்
காதலும் இல்லை
எப்படி சொல்வேன்
என் காதலை
அம்மா அப்பா அண்ணன்
நட்பு மனிதம் மிளிரும்
மனிதர்கள் பாசம் மிக்க
விலங்குகள் உணவு தரும்
தாவரங்கள் உயிரற்ற பொருட்கள்
ஒவ்வொன்றாக சென்று
என் காதல்
சொல்ல நேரமில்லை