என்றும் அழியாது
இந்த காதல்
பிரியும் போதுதான்
சொல்லவும் முடியாத
ஏக்கங்கள் தொடர
ஆரம்பிக்கிறது,
இதயத்தினுள்
ஒரு வலி
யாரோ உள்ளிருந்து
ஊசியால்
குத்துவது போல,
உறக்கங்கள்
என்னை விட்டு
வெகுதூரம்
விரண்டோடுகிறது,
சில நினைவுகள்
மட்டும்
நெஞ்சினில் அழுத்தமாய்,
ஆனாலும்
உள்ளார்ந்து
கருக்கொண்ட
காதல் நினைவுகள்
என்றும் அழியாது.