தமிழன் என்று சொல்லு தலை நிமிர்ந்து நில்லு
எம்மொழிக்கும் இல்லாத சிறப்பு
தமிழுக்கு உண்டு
எவர்க்கும் இல்லாத பெருமை
தமிழர்க்கு உண்டு ........
தொன்றுதொட்டு காலம் முதல்
இன்றைய காலம் வரை
தமிழின் சாதனைகள்
எல்லைகள் இல்லாதது .......
உலகின் முதல் இனம் உன் இனம்
முதல் மொழி உன் மொழி
குமரிக்கண்டம் உன் பிறப்பு
திராவிடம் தான் உன் நாகரீகம் ........
ஆயிரம் ஆண்டுகள் உன் பழமை
மரபு சொல்லும் தமிழ் பெருமை
வரலாறே வியக்கும் வரலாறு
உன் பழந்தமிழ் வரலாறு ........
வானவியல் ஆய்வுகளும்
கட்டிடக்கலை திறமைகளும்
நோய்களை கண்டறிந்து
கண்டுபிடித்த மருந்துகளும் .........
திருவள்ளுவனின் திருக்குறளும்
கண்ணகியின் காவியமும்
மகாபாரதமும் ராமாயணமும்
சிலப்பதிகாரமும் சீவகசிந்தாமணியும் ........
கல்வெட்டும்
கண்ணை நிரப்பும் கற்சிற்பமும்
பழமைமிகு ஓவியங்களும்
ஓலைச்சுவடி பதிவுகளும் .....
இலக்கியமும் நாடகமும்
கவிதையும் காவியமும்
நாட்டுப்புற பாட்டும்
மயிலாட்டமும் ஓயிலாட்டமும்.........
எல்லாம் தமிழர்க்கென்ற சிறப்புகளாய்
தரணியே புகழ்கையிலே
தமிழன் என்று சொல்லு நீ
தலை நிமிர்ந்து நில்லு நீ ...........
மொழிப்பற்று வேண்டும்
நமக்கு மொழிப்பற்று வேண்டும்
தமிழிலே கற்று தமிழின்
தரம் காக்க வேண்டும் .........