தளத்தில் ஒரு ராஜ பக்சே----- பகுதி 3

ஏகோபித்த எதிர்ப்புகளுக்கு மத்தியில்.

சுற்றித்திரிந்து நிரூபித்தாயிற்று

உலகில்
பாதுகாப்பாகவும்,
இந்திய அரசின் உத்திரவாதத்துடனும்

சுதந்திரமாகத்தான் திரிகிறேன்
நான் என்று.

சமாதானம் சொல்லியாயிற்று
வெட்கங்கெட்டத் தனமாக,

மக்களாட்சி நாடுகளில்
எதிர்ப்புகள் இருப்பது இயல்புதானே
எனும் விளக்கவுரை மூலம்

முகத்தில் தெளிக்கப்பட்ட
சாக்கடையை
துடைக்க முடியாமலேயே.

ஆக
அழித்தலும்
அதன் தொடர்பான செயல்களுமே
தனது அடையாளம்
என்று கொண்டாயிற்று.

அதில் கர்வமும் கொண்டு
நெஞ்சை நிமிர்த்தியாயிற்று.

எதிர்ப்பு வரும் இடங்களுக்கே
கணைகளை திருப்பியாயிற்று
அவர்களும் இதில்
கூட்டுக் களவாணிகள் என்று.

அதனால்
அவர்களையும்
வாயடைத்துப் போக
வைத்தாயிற்று.

சரி.
இதெல்லாம் இப்போது எதற்கு
படம் போட்டு காண்பிக்க வேண்டும்?

அதற்கும் தலைப்பிற்கு என்ன தொடர்பு?

முதலில்
ராஜ பக்சேயின்
குணாதியத்தின் சாராம்சம்.

அழித்தல்,
அழித்தல் தொடர்பான செயல்கள்
இவை மட்டுமே தனது அடையாளம்
இது உலகறிந்த உண்மை.

இந்த அழித்தலில்,
தான் விரும்பாத தமிழர்கள்,
தமிழ்மணம் வீசும் சங்கதிகள்,
தமிழ் கலாச்சாரங்கள்,
தமிழர்கள் சார்ந்த மதம்,
அதன் அடையாளங்கள்

இவைகள் மட்டுமே
தெரிவு செய்யப்பட்ட இலக்குகள்,

இந்த தொடர் செயலில்,
முதலில்
தனக்கு கூட்டாக இந்திய அரசு,

பிறகு எதிர்ப்பு என்று வரும்போது
அதுவும் கூட்டுக் களவாணி என்று
காட்டிக்கொடுக்கும் எட்டப்பன் வேலை.

சரி
இதெல்லாம் எப்படி
குணாதிசயங்களாக உருவாகின?

இது மண்ணின் மகிமை.
சுற்று சூழலின் மகிமை.

அந்த மண்ணில் விளைந்த
விதி விலக்கு வித்து---

ஏனெனில் அனைத்து மனிதர்களும்
அந்த மண்ணில் அவ்வாறு இல்லையே.

சரி இதெல்லாம் எதற்கு?

தொடரும்

எழுதியவர் : மங்காத்தா (1-May-13, 2:07 pm)
பார்வை : 65

மேலே