தளத்தில் ஒரு ராஜ பக்சே----- பகுதி 2.

இன்னும் இருக்கின்றனவே
தமிழின் தமிழனின் தடங்கள்
அம்மண்ணில்.........
கோயில்கள்,
மதச்சின்னங்கள்,
கலாச்சார செயல்பாடுகள்,
பரம்பரை நினைவலைகள்.
என்ன செய்வது?
இடித்துத் தள்ள வேண்டியதுதான்.
வரலாற்று சின்னங்களாக
நிலைத்து இருக்கும் பெயர்களை
என்ன செய்வது?
மாற்றி விட வேண்டியதுதான்.
அவைகளையும் செய்தாயிற்று.
இன்னும் என்ன பாக்கி இருக்கிறது.
போராளிகள் மற்றும்
தமிழர்களின் உணர்வுகளுக்கு
ஆதரவுக் குரல்களும்
போராட்ட வெளிப்பாடுகளும்,
ஊடகப் பறைசாற்றலும்
உலகளாவிய
அரசியல் அழுத்தங்களும்தான்
என்ன செய்வது?
சென்று வரலாம் இன்பச்சுற்றுலா
எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு மத்தியில்,
இறுமாப்பாக
இதே ஊடகங்களின்
காட்சிப்பொருளாக,
அவைகளின்
பார்வையாளர் எண்ணிக்கையை
கூட்டும் விதமாகவும்,
தமிழர்களின் அவல நிலை வைத்து
வயிற்று பிழைப்பு நடத்தும்
அரசியல் கட்சிகளுக்கு
சோறிடும் வகையிலும்.
தயாராயிற்று
சுற்றுலா விவரப்பட்டியலும் .
சென்று வரவேண்டியதுதான்.
திருப்பதிக்கும், புத்த கயாவிற்கும்
ஏகோபித்த எதிர்ப்புகளுக்கு மத்தியில்.
தொடரும்..................