தளத்தில் ஒரு ராஜ பக்சே --- பகுதி 5 (இறுதி)

அதில்
தொடர்போக்கை ஆராய்ந்தால்
அதிலும் ஒற்றுமை உள்ளதே. .................


நம்பிக்கைக்காக தளத்தில்
சில வளமான சிந்தனைகளோடு
அணி சேர்ந்து கொண்டு

தனது நோக்கில்
பயணம் தொடங்குவது,

தொடர்ந்து
அழிவு சிந்தனையை பரப்புவது,

தடுமாறும் இடத்தில்
கூட்டணி சேர்த்துக் கொள்வது,

எதிர்ப்பு வந்தால்
கூட்டாளிகளை
காட்டிக் குடுக்கும்
எட்டப்பன் செயல் செய்வது..

தமிழ், தமிழர்களின் உணர்வுகள்,
தமிழர்களின் அடையாளங்கள்,
தமிழர்களின் கலாச்சார சின்னங்கள்
ஆகியவற்றை அழிக்க

தமிழன் எனும் போர்வையில் திரியும்
அந்த அழிவு சிந்தனையை
தொடக்கத்திலேயே
அடையாளம் கண்டு விலக்காவிட்டால்

தமிழுக்கும் தமிழர்களுக்கும்,
தமிழ் கலாச்சாரத்திற்கும்
அதிக சீரழிவு நிச்சயம் ஏற்படும்
என்பதை எச்சரிக்கவே இந்த படைப்பு.

இந்த படைப்பில்
சாயலாக குறிப்பிடப்படும்
அந்த சிந்தனை

பசுத்தோல் போர்த்திய ஓநாய்-
தமிழன் போர்வை போர்த்தி
தளத்தில் திரியும் ஒரு ராஜ பக்சே

இதை அழுத்தமாக
உடனடியாக உணரவேண்டும்..

படைப்பின் நோக்கம்
தனிநபர் சாடல் அல்ல.

ஒரு சமுதாயத்திற்கு ஏற்படப்போகும்
பேரிழப்பிற்கு வழிவிடாமல் தடுப்பதே
இந்த படைப்பின் நோக்கம்.

தளத்தில்
அந்த ராஜ பக்சேவை
தொடரவிட்டால்
அது தற்கொலைக்கு சமம்
என்பதை

தமிழர்களாகிய
தள உறுப்பினர்களாகிய
நாம் அனைவரும்
உடனடியாக உணரவேண்டும்

படத்தை சற்றே பார்வையிடுங்களேன்.

அதில்
வேட்டையாடி வயிறு நிரப்பும்
கொடூர விலங்குகள் கூட
மூன்று சூழ்ந்து கொண்டு
வாழ்வு நேயம் வளர்க்கின்றன

மனிதனுக்கு ஏன் இல்லை
மனித நேயம் வளர்க்கும் எண்ணம்?
ஏன் துடிக்கின்றான்
வெறிகொண்டு
இவன் மட்டும்
அனைத்தையும் அழித்துவிட...?




கேட்பவள் மங்காத்தா........

எழுதியவர் : மங்காத்தா (1-May-13, 3:12 pm)
பார்வை : 74

மேலே