கோடாங்கி சிந்தனை ஒரு விரிவுரை - பகுதி 1

கோடாங்கி சிந்தனை
இதன் பொருள்தான் என்ன?
கோடாங்கி சிந்தனை---
ஏதோ இழிச் சொல் என
புரிதல் கொள்ளும் நபர்கள்
தனிவிடுகையில்
என்னிடம்
தூது விடுகின்றனர்.
இந்த சொல் இழிச்சொல் என்பது
மட்டும் இவர்களுக்கு புரிதலில்
வந்து விடுகிறது.
ஏனெனில் எந்த மனிதரும்
ஒரு மொழியை கற்கும்போது
வேடிக்கையாவோ, நேர்த்தியாகவோ
ஆர்வமாக கற்கும்போது
அதில் உள்ள சில வசைச்சொற்களை
துல்லியமாக கற்றுகொள்ள ஆர்வம்
காட்டுவது இயல்பு.
மேலும் ஒருவரின் மொழிவளம் என்பதை
உணர்ச்சிவயப்படும்போது அவர்
வெளிப்படுத்தும் யதார்த்த சொற்களை
வைத்தே மதிப்பிடுகின்றனர்.
காரண காரியங்களோடு வெளிப்படுத்தப்படும்
வசைச்சொற்களில் அசைக்க முடியாத தன்மை
இருப்பின் அதை அழுத்தமான கோபம் என்று
கணக்கிடுகின்றனர்.
எனவே தமிழ் மொழி உலகில் உலாவுவோர்
தமிழில் அறிமுகம் ஆகியுள்ள இந்த கோடாங்கி
எனும் சொல்லை நேர்முகம் கண்டிருக்க வாய்ப்பில்லை.
எனினும் அதன் உபயோகம் சற்றே சாயலாக அறிந்திருப்பர் என்பது தெளிவு.
அதாவது இது உயர்மதிப்பிற்குரிய சொல் அல்ல
என்பது மட்டுமாவது புரிந்து இருப்பர் என்பது திண்ணம்.
இது வசைச்சொல் என்பதும்,பிறர்
தன்னை சாயலாக குறிப்பிடுகின்றனர்
என்றும் புரிதல் கொள்ளும் ஒருவர்
என்ன செய்வார்?
இந்த வசைச்சொல்லுக்கு ஆளாகும் நிலையில் இருந்து
தப்பிச்செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்
அதாவது இந்த சொல் தமக்கு பொருந்தாது என
மறுப்பு சொல்லத்துணிவார்.
மேலும் தம்மை இந்த சொல்லால் சாடியவரை நோக்கி
விமர்சனக் கணைகள் எறிவார். இது மனித இயல்பு
அதனால்தான் எனக்கு தனிவிடுகையில்
தூதுகள் வந்த வண்ணம் இருக்கின்றன
அதனால்தான் இந்த படைப்பின் அவசியம் ஏற்பட்டது.
சரி சங்கதிக்குள் நுழைவோம்.
தொடரும் ..............
தொடர்பவள் மங்காத்தா.......