//ஒற்றை பூவே //

//பூவே //
எதை அடைய ஒற்றை காலில் தவமோ
மணத்தால் மனதை மயக்கவா
இதழால் இதயத்தை ஈர்க்கவா
அழகால் அகிலத்தை அடையவா
(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)

ஒற்றைப் பூவே உந்தன் வாசம்
உலகை மயக்குதே

சிற்றின காம்பில் சில்லென மலர்ந்து
சிந்தனை செய்வாயா?- நீ
சிகரத்தை அடைவாயா?

சிந்தனைக்கு சிறகொன்று
சிரித்தே தருவாயா ?
இதயத்தை உன்னிதழால்
வருடி விடுவாயா?

ஏக்கம் கொண்டே உன்னருகே -எனை
ஏற்றுக் கொள்வாயா ?
என்னுடன் சேர்ந்த மணத்தால்
நீயும் தோற்றுப் போவாயோ?

பலவண்ண வடிவத்தில்
பலரை ஈர்ப்பாயா?
சில்லென்ற மனத்தாலே
நெருங்கி அழைப்பாயா?

எழுதியவர் : bhanukl (1-May-13, 11:06 pm)
பார்வை : 206

மேலே