மனிதா ! மனிதனாய் இரு

சாதியும் சாஸ்த்திரமும்
சவக்கிடங்கில் வீழட்டும்
உயிர் கொடுத்த தேசத்தை
உச்சி முகர்வோம்

மனிதனின் பிறப்புக்கு
மாட்சிமை உண்டு
மதி கெட்ட சாதி எதற்கு

கொளுத்த அரசியல்வாதிகள்
கோமாளியாகும் மக்கள்
கையில் அரிவாளோடும் கற்களோடும்
வெறியர்களின் கூடாரத்தில்
காயம் பட்ட மனிதர்களின் முனகல்கள் மட்டும்
மிச்சமாய் ............................

நாளைய உணவுக்கு
நாள்கணக்கில் தவம் கிடக்கும் மனிதனுக்கு
அரிவாள் எதற்கு
உன் அறிவு வாளை தீட்டு

மரக்காணம் மட்டுமல்ல
சாதி வெறிக்கு சாட்சியமாய்
பல குக்கிராமங்களும் உண்டு தமிழகத்தில்

ஒரே வயல் வெளியில் ஒரே வரப்பில்
ஒன்றாக உழைக்கும் நீங்கள்
மதி கெட்டு வீழ்வதுவோ!
இதை சதியென்று நீயும்
புரியும் நாள் எந்நாளோ !

அரசியல் வாழ்வு சரியும் போது
வாக்கு வங்கியை காப்பாற்ற
ஏழ்மையில் வாடும் மக்களுக்கு
வாய்க்கரிசி போடுவதோ!
இதை இன்பமென சிலர் கொள்ளுவதோ!

மனிதனே எழுந்து நில் !
அடிமை விலங்கை தகர் 1
ஆண்மையோடு எழு !
உனது வாக்கு வங்கியால்
அவர்களுக்கு வாய்க்கரிசி போடு!

சாதியும் சாஸ்த்திரமும்
சவக்கிடங்கில் வீழட்டும்
உயிர் கொடுத்த தேசத்தை
உச்சி முகந்து கொண்டாடுவோம் !
மனித இனம் ஒன்று என்றே!

எழுதியவர் : porchezhian (3-May-13, 8:48 pm)
சேர்த்தது : porchezhian
பார்வை : 116

மேலே