சங்கர் திரையரங்கம் கொத்தமங்கலம்
சாயங்காலம் ஆறு மணி
விநாயகர் பாட்டு சத்தம்
எல்லோரையும் அழைக்கும் அதான்
எங்கள் ஊர் சங்கர் திரையரங்கம்
கை நிறைய சில்லறை
எண்ணி வைத்து கொள்வோம்
அனுமதி சீட்டுக்கும்
கை முறுக்குக்கும்
மிதி வண்டி ஸ்டான்ட்
திறக்கும் வரையில்
அனுமதி சீட்டு வாங்க
அனுமதி இல்லை
கிர்ர்ர் என்ற மணி சத்தம்
கேட்க்கும் வரையில்
வரிசையில் வாரிசுகளை
சுமந்த படி எனது ஊர் பொதுமக்கள்
அனுமதி சீட்டு வாங்கி
ஆட்டு மந்தை போல் ஓடி
இடம் பிடிப்போம்
கடைசி வரிசை நாற்காலில் அல்ல
முன் வரிசை மணல் திட்டில்
மணல் எங்கும்
துண்டு பீடிகளும்
சிகரெட் அட்டைகளும்
கலந்து கிடக்கும்
வெத்தலை பாக்கு கிழவிகள்
மணலில் எச்சில் துப்பி
மூடி மறைத்தது தெரியாமல்
மண்ணை கிளறி
மணல் முகடு கட்டி அமர்வோம்
படம் போடுவதற்கு முன்னரே
படத்தின் கதயை
பின்னல் ஒருவர் முணுமுணுத்து
கொண்டிருப்பார்
பகல் நேரத்தில்
தேடி பொறுக்கிய
லாட்டரி சீட்டுகளை
கிழித்து கால்சட்டையில்
ஒழித்து வைத்திருப்போம்
படம் போடும் போது
சில சிலேடுகள் வந்து போகும்
எச்சில் துப்பாதிர்கள்
சிகரெட் பிடிகாதிர்கள் என்று
படத்தின் தலைப்பு
போடும் போதும்
கதாநாயகன் வரும் போதும்
விசிலோடு எங்கள்
லாட்டரி சீட்டுகளும் பறக்கும்
பேய் படமென்றால்
அமைதி நிலவும்
சண்டை படமென்றால்
சில பெருசுகளின்
கைதட்டல்கள் ஓங்கி கேட்கும்
இடைவேளை போடும் வரையில்
அடக்கி வைத்த சிறுநீர்
ஆறுபோல பாயும்
படம் முடியும் வரையில்
கை முறுக்கும்
மல்லி காப்பியும்
இடையிடையே வந்து போகும்
தூங்கிவழியும்
மகனை எழுப்பியே
தகப்பனின் பாதி
படம் முடுஞ்சுரும்
படம் முடுஞ்சவுடன்
அண்ணனின் கையை
அரை தூக்கத்தில்
பிடித்து கொண்டே
வீடு வந்து சேர்ந்து
உறங்கும் போது
அலக்ஸ் பாண்டியனுக்கு சாவில்லை டா
என்றே உளறி கொண்டே தூங்குவேனாம்
மறு நாள் பள்ளிகூடம் முழுவதும்
அலக்ஸ் பாண்டியன் கதையையோடு
என் கதையயும் சேர்த்து சொல்வேன்
அடிகடி மூடப்படும்
சங்கர் திரையரங்ககம் இப்போ
முழுவதும் மூடி பலகாலமாச்சு
இப்போ அவ்வழியே போன
பட்டு சத்தம் கேட்காது
விசில் சத்தமும் கேட்காது
பழைய ஞாபகம் மட்டும்
நெஞ்சுக்குள்ள கீர்ர்ர்ர்ர்ர்ர் என்ற
மணி அடித்து செல்லும் .......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
