முதல் கவிதை முத்தாய்ப்பு கவிதை

எனதருமை தோழர்களே
என்னுயிர் தோழிகளே
கவி படிக்கும் வாசகர்களே
கவி வடிக்கும் கவிஞர்களே !

காகிதத்தில் எழுதிய கவிதைகளை
கசக்கி போடப்பட்ட குப்பைகளை
வீண் என்று ஒதுக்கிய வரிகளை
கவிகளாக வடிக்கிறேன் இன்று முதல் எழுத்தில் !

அ- நா ஆவன்னா சொல்லிகொடுத்த அம்மா
அன்பாய் போதித்த ஆசிரியர்
அதற்க்கடுத்ததாய் இந்த
எழத்து தளம் !

என் கிறுக்கல்கள்
இன்றுமுதல் கவிதைகளாய்
அமர்க்கலபடப்போகின்றன
எழுத்து துணையோடு !

முகம் காட்டாத உத்தமர்களின்
முத்தான செயல் இது
தமிழுக்கு ஆற்றும் பெரும் தொண்டு
கவிஞர்களின் வாய்ப்புக்கு மிக நன்று !

என்னுள்ளம் நெகிழ்ந்து
பிறர் உள்ளம் மகிழ்ந்து
வரலாறுகள் படைக்க காத்திருக்கு
கவிக்கொரு தளம் எழுத்து தளம்!

முதல் கவிதையை எழுத்திற்கு அர்பணித்து
இறைவனக்கத்தோடு இன்று முதல்
தொடர்கிறேன் கவிப்பயணம் !

எழுதியவர் : பன்பரசி (3-May-13, 11:22 pm)
பார்வை : 107

மேலே