மனிதம் எங்கே போகிறது

ஆள பிறந்த உலகம் இதில்
தினம் அடித்து சாகுது மனித இனம்
கேள்விகள் கேட்க யாருமில்லை
நீதியாய் வாழவும் ஆள் இல்லை !

இறக்கம் கொண்டவர் எவருமில்லை
உறக்கம் கொண்டதோ மனித மனம்
கொல்லைக்கும் எல்லைக்கும் சண்டைபோட்டு
தொல்லைகள் தேடுது மனித குணம் !

ஜாதி சண்டையில் மண்டை உடைய
வம்பை தேடி நிம்மதி தொலைய
இன்ப வாழ்க்கை துனபமாய் போச்சு
நண்பர்கள் மாறி எதிரியாய் ஆச்சு !

அறிவை மறந்த ஆன்மீக பயணம்
உண்மையை மறந்து பொய்மையை தேடி
வேற்று நாடகங்கள் அங்கே அரங்கேற
விளையாட்டாய் போனது சாமியார் வேஷம் !

பெற்றவள் கடவுள் பாடம் படிப்பான்
நடைமுறையில் ஏனோ ஏற்க மறுப்பான்
தொல்லைகள் போல் அவர்களை நினைத்து
எல்லைகள் தாண்டி தெருவில் விடுவான் !

வரமாய் வரும் தாரம் அவளிடம்
வன்மையாய் கேட்க்கும் வரதட்சணை பட்டியல்
கிடைத்ததும் பற்றாமல் இன்னும் கேட்டு
கொடுமைகள் செய்தே கொலையும் செய்வான் !

வீடேறி கேட்க்கும் ஒட்டு பிச்சை
பதிவி ஏறி போனதும் மறந்து போகும்
கொள்ளைகள் மட்டுமே அரசியலில் நிற்கும்
கொள்கைகள் எல்லாம் காற்றில் பறக்கும் !

சேவை பாணியில் இன்றைய கல்வி
கேட்டு புடுங்குது கோடி கோடியாய்
பெத்தவங்க பொழப்பு அடிமையாய் போச்சு
வீட்டு நகையெல்லாம் அடகுக்கு போச்சு !

விட்டு கொடுக்க மறந்துபோனான்
எடுத்ததற்கு எல்லாம் சண்டை தேட
வரப்பு சண்டையும் வாய்க்கால் சண்டையும்
நீதி மன்றத்தில் வழக்கில் இருக்குது !

எங்கே போகுது மனித வாழ்வு
எங்கு காணினும் ஏற்ற தாழ்வு
சமத்துவம் மறந்த உலகம் இதிலே
நீதியும் இல்லே நியாயமும் இல்லே !

எழுதியவர் : பன்பரசி (3-May-13, 11:47 pm)
பார்வை : 964

மேலே