சிற்றின்ப சக்கரத்தில் சுழழுமுலகம் :-

மெய் யுணர வரு பொய்யின்பம்
ஐ புலன்வழி வெளி வழிந்து
ஆளும், வாழும் கால அளவு
ஊசி முனையின் பனி துளியளவே!!!

உற்றுற்று வெளிபார்க்கு ஓர் புலன்
ஓசை பெற துடிக்கு மொன்று
அறுசுவை ஓர் புலன் கேட்க
அரும்பு மலர்வாசம் விரும்பு மொன்று!!!

தீண்டி யொரு வுணர்வு சுகிக்க
ஐ புலனடுப்பில் ஆணும் பெண்ணும்
சிற்றின்ப யெல்லையினை தன்னி லடக்க
மனித வுயிர்கள் சுழலும் செக்கு!!!


ஐ புலனாசையால் விளையும் மழலை
அறம் பொரு ளின்ப வீடு மறந்து
பொரு ளின்பமே வாழ் வாதாரமாய்மாற
ஐபுல சிற்றின்ப சக்கரத்தில் சுழழுமுலகம்!!!

நன்றி

வாழ்க வளமுடன்

ரா.சிவகுமார்

எழுதியவர் : ரா.சிவகுமார் (5-May-13, 11:05 am)
பார்வை : 113

மேலே