நன்றிகள் எழுத்து தளத்திற்கு

எங்கோப் பிறந்து எங்கோ வளர்ந்தோம்
தமிழால் இணைந்தோம் தளத்தில் நாமும் !
முகமே தெரியாத முகங்களும் நண்பர்கள்
முகவரி அறியாத அன்பர்களும் நண்பர்கள் !

எண்ணமும் எழுத்தாகி எழுச்சி பெறுகிறது
நினைவுகள் நிழலாகி நிஜமாய் மாறுகிறது !
உணரும் உணர்வுகள் உருவம் அடைகிறது
உள்ளமும் களிப்புற்று சிந்தை குளிர்கிறது !

கருத்தில் மோதல் களத்தில் வந்திடும்
எழுத்தில் காதல் எவருக்கும் தமிழால் !
இதயங்கள் நிறையும் அழகு கவிதையால்
இன்பம் பொங்கிடும் ஈடில்லா தமிழால் !

நட்பு வட்டமோ நாளும் விரிந்திடும்
நண்பர்கள் அறிமுகம் அன்பை வளர்த்திடும் !
நம் இன இதயங்கள் என்றும் வாழியவே
நன்றிகள் பலபல எழுத்து தளத்திற்கு !


--
பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (5-May-13, 7:52 am)
பார்வை : 99

மேலே