வர்த்தகமே உலகம் ......
என் காலை சிற்றுண்டிக்கு
பிரமாக்கள்...
பஞ்சாபியர்களோ? உ.பி யர்களோ?
நான் பருகும் தேநீருக்கு
இலை பறிப்பாளிகள்...
அஸ்ஸாமியர்களோ ? மலையாளியர்களோ ?
என் மதிய உணவிற்கு
மூலாதாரம்...
தெலுங்கர்களோ ? வங்காளியர்களோ ?
நான் மட்டாய் உடுத்தும்
பட்டாடை பண்ணியவர்கள்...
கன்னடர்களோ? சீனர்களோ?
நான் சிட்டாய் பறக்க
பெட்ரோல் கொடுப்பவர்கள்
ஈரானியரோ? ஈராக்கியரோ?
இப்படி
எல்லாம் கிடைத்து விடுகின்றது
வர்த்தகத்தினால் .
வடிநில வயலாய்யிருந்தும்
வரண்டுவிட்ட வயலுக்கு
காவிரியும் ,
பிறப்பிடம் இதுவாக இருந்தும்
பிறரிடம் கட்டுப்பட்ட
பெரியாறும் ,
கிடைக்காமல்
போய்விட்டது
வர்த்தகமாய் இல்லாததால் .