05.05
உன்னோடு கைக்கோர்த்த அக்கணம்
என் வாழ்வில் வசந்தங்கள்
பூக்க தொடங்கிய வசந்தக்காலம்!!!
என் சட்டைப்பையில் கையிட்டு
நீ பிச்சையிட பணம்
எடுக்கும் பொழுதெல்லாம்
என் இதயத்தையும் தொட்டு
என்னுள்ளும் ஈகையை வளர்த்தவளே!!!
எனக்காய் எண்ணற்ற வலிகளை
பொறுத்து என் காதலின்
சின்னத்தை ஈன்றேடுத்தவளே!!!
எனக்கு உடலில் காயம்
பட்டாள் உள்ளத்தால் வேதைனை
கொண்டவளே!!!
என் வாழ்வின் ஏற்றங்களில்
இணையில்லா பங்கு வகிப்பவளே!!!
என் வாழ்வின் இறக்கங்களில்
என்னை தேற்றி போற்றுபவளே!!!
அன்பு,பாசம்,நேசம்,
காதல்,கருணை,ஆலோசனை
என எல்லா சுவைகளையும்
அளவில்லாமல் அள்ளி தரும்
என்னவளே எனக்காய் வாழ்பவளே!!!
இறைவன் எனக்களித்த பரிசே
இன்று போல் என்றும்
எல்லா நலனையும் பெற்று
நோய் நொடி இல்லாமல்
நீடோடி வாழ எல்லாம்
வல்ல இறைவனை வேண்டுகிறேன்!!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என் தேவதையே!!!
இப்படிக்கு உன் நிழலில்
என்றென்றும் சிறக்கும் அன்பு கணவன்
அன்புடன் நவீன் மென்மையானவன்