காதலால் தவிக்கிறேன்!
காதலால் தவிக்கிறேன்!
உற்றுற்று நானுன் முகம் பார்த்து
கற்கு இனிய இளம்பருவ வயதினில்
காதல் சேற்றினில் மனஞ் சிக்க
காதற் காலுருவமுடியா குட்டியாடாய் தவிக்கிறேன்!!!
வெள்ளை தாவணி மலர் தேகமூட
கொலு சோசையில் நின் குழலட
மழை துறலான நின்னொற்றை பார்வையினில்
இதயவேர் நனையா பயிராய் தவிக்கிறேன்!
தேர் நீவருமழகை சாலையோரங் காண
விரதமிருந்த விழியிரண்டும் இமைமூடாது நிற்க
புண்ணகை புனல் மறந்த காவிரியாய் நடக்க
பாலைநிலம் வாழும் விலங்காய் தவிக்கிறேன்!!!
அன்பு உயிர் தந்து, பருவ ஆசையால்
விழி பெற்ற காதல் குழந்தைதனை
பொற்றோருடன் இருப்பிடம் விட்டு நீ போக
இதயம் தனியாய் வளர்க்க தவியாய் தவிக்கிறேன்!!!
நன்றி
வாழ்க வளமுடன்
ரா.சிவகுமார்