இசை
எல்லாமே இங்கு இசையே
உலகமே அதன் திசையே....
கவிதை எழுத தீட்டும் சத்தம்
காதல் சொல்ல துடிக்கும் நெஞ்சம்...
இதையும் கேளு கொஞ்சம்!!!!!
பரதம் ஆடிடும் பாவையின் பாதம்
கைகள் போட்டிடும் வண்ண தாளம்..
கவிஞர் எழுதும் கவிதையோடு
ஸ்ருதிகள் சேரும் அழகை பாரு...
கண்கள் மூடி கொஞ்சம் ரசித்திடு
தென்றல் இசையை மெல்ல சுவைத்திடு.
நான்கு கால்களில் தவழ்ந்து செல்லும்
பிள்ளை எழுப்பும் மழலை சத்தம்...
மூன்று கால்களில் முதிர்வை சொல்லும்
முதுமை எழுப்பும் புதிய கீதம்...
இரு மனம் இனைதிடும் திருமணமோ
இறுதியை சென்றிடும் ஊரவளம்...
இசையிலாமல் முடிவில்லை
இதயமே அதன் செல்ல பிள்ளை...