புல்வெளியில் ஓர் பூக்கோலம்

மண்ணில் போடும் மாக்கோலமும்
விண்ணில் வந்திடும் வானவில்லும்
இணைந்து ஒன்றாய் தெரிகிறது இந்த
புல்வெளியில் போட்ட பூக்கோலம் !

பரந்து திரிந்த பசுமை போர்வையாய்
பார்த்து ரசிக்க அழகுப் புல்வெளியாம் !
படுத்து கிடக்கும் பூஞ்சோலைப் போல்
பாய்ந்து செல்லும் பூக்கள் கூட்டமிது !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (6-May-13, 4:29 pm)
பார்வை : 91

மேலே