அம்மாவின் விரல் பிடித்து (குமார் பாலகிருஷ்ணன் )

எப்படிச்சொல்லமுடியும்
வாழ்க்கை தந்தவளை
வார்த்தைகளால்…

அவள் பாலாக்கிய ரத்தம்
தாலாட்டிய சத்தம்
இவைதான் வாழவைக்கிறது
உலக மானுடத்தை….
==========================
மழைப்பொழுதில் குடையாய்
வெள்ளம்வரின்
மூடப்பட்ட மடையாய்
நான் பழகிய நடையாய்
என்னை கடிக்கவரும்
கொசுக்களுக்குத் தடையாய்
நூறூகிலோ தங்கத்தையும்
விஞ்சும் எடையாய்
நான் தேடும்
ஆயிரம் வினாக்களுக்கு
ஒருவார்த்தை விடையாய்
அம்மா.
===========================
எனக்கான பயணத்தில்
என்னைவிட
அதிகதூரம் நடப்பார்
எனக்கான பாதை
தெரிவுசெய்ய
அதிகநேரம் படிப்பார்
என்நிறம் கறுப்பாதலால்
ஏனைய நிறம் வெறுப்பார்
எப்போதாவது மதிப்பெண்
குறைந்துவிடின்
புத்தகங்களை அடிப்பார்
அம்மா
=======================
எனக்காக வீட்டுப்பாடம்
செய்வார்
கோலமிட்டு
தேநீர் வைத்து
சமையல் செய்து
தந்தையை அலுவலகம்
அனுப்பி
தங்கையை பள்ளிக்குக்
கிளப்பி
பாத்திரம் துலக்கி
துவைத்து முடித்து
ஓய்ந்து இருக்கும்
அந்த ஒருமணி நேரத்தில்..
==========================
என் அம்மா
என் மீது எதையும்
திணிப்பதில்லை
அவர் கடைசியாய் திணித்தது
நேற்றிரவு நான் வேண்டாம் என்ற
கத்திரிக்காயைத்தான்
===========================
இதயம் ஒன்றென்பது
அறிவியல் ரீதியாய் சரியெனினும்
அன்பியல் ரீதியாய் தவறு
ஒவ்வொரு மகனுக்காகவும்
மகளுக்காகவுமே
எப்போதும் துடிக்கிறது
அம்மாவின் இதயம்..
====================
அம்மா என்பது
உறவல்ல உணர்வு
உறவுகள் பொய்க்கலாம்
உணர்வுகள்

எழுதியவர் : kumaresan (6-May-13, 4:29 pm)
பார்வை : 231

மேலே