பேருந்து அனுபவம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஓடுகின்ற பேருந்தில்
ஓடிக்கொண்டே ஏறும்போது
ஏற்படுகின்ற இனிய சுகத்தை
சொன்னால் புரியாதாம்
அனுபவித்தால் தான் தெரியுமாம்
அழகாய் சொன்னான் அந்த
கல்லூரி மாணவன்...
தாவி ஏறும்போது
தவறிவிழுந்தால்
பேருந்தின் சக்கரங்கள்
பிரியமுடன் அவனை அனைத்து
செல்லும் பொழுது ஏற்படுகின்ற
சோகத்தை சொன்னால் புரியாது
அனுபவித்தால் மட்டுமே தெரியும்
- மழைக்காதலன்