தமிழகத்தில்! சாராய பஞ்சமில்லை! பஞ்சமில்லை! பஞ்சமென்ப தில்லையே!

குறிப்பு:- மகாகவி பாரதியாரின் ”அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே” என்ற மெட்டில் படிக்கவும்.

தமிழகத்தில்! தமிழகம் தன்னில்! தமிழகத்தில்!
பஞ்சமில்லை! பஞ்சமில்லை! பஞ்சமென்ப தில்லையே!

சொட்டு நீர் காவிரியில் வாராதடைப்பினும்
தமிழக அரசு விற்கும் சாராயநீருக்கு துளியளவேனும்
பஞ்சமில்லை! பஞ்சமில்லை! பஞ்சமென்ப தில்லையே!

விட்டில்பூச்சியாய் இளைஞனதில் வீழ்ந்தழிந்து போதினும்,
பஞ்சமில்லை! பஞ்சமில்லை! பஞ்சமென்ப தில்லையே!

நாளைய தலைமுறை நோய் கொண்டு பிறப்பினும்,
பஞ்சமில்லை! பஞ்சமில்லை! பஞ்சமென்ப தில்லையே!

குடி நீருக்கு குடங்கள் தெருவில் காத்திருக்க போதினும்,
பஞ்சமில்லை! பஞ்சமில்லை! பஞ்சமென்ப தில்லையே!

பசியால் பல குடும்பம் அழிந்துபோன போதினும்,
பஞ்சமில்லை! பஞ்சமில்லை! பஞ்சமென்ப தில்லையே!

கையிலுள்ள பணம் சாராயகடைகளில் கரைந்து போன போதினும்
பஞ்சமில்லை! பஞ்சமில்லை! பஞ்சமென்ப தில்லையே!

உச்சி மேகம் வான் நீரை வஞ்சனை செய்த போதினும்
பஞ்சமில்லை! பஞ்சமில்லை! பஞ்சமென்ப தில்லையே!

வீடு, வாசல், மனைவி, மகனிழந்து மக்கள் நின்ற போதினும்
பஞ்சமில்லை! பஞ்சமில்லை! பஞ்சமென்ப தில்லையே!

பேதையும், பெதும்பையும் கருகியழிந்த போதினும்,
பஞ்சமில்லை! பஞ்சமில்லை! பஞ்சமென்ப தில்லையே!

நீரின்றி விவசாயம் அழிந்து போன போதினும்
பஞ்சமில்லை! பஞ்சமில்லை! பஞ்சமென்ப தில்லையே!

நாளெள்ளாம் மின்சாரம் தடையாயிருக்கு போதினும்
பஞ்சமில்லை! பஞ்சமில்லை! பஞ்சமென்ப தில்லையே!

காய்கறி விலைவாசி வானுயரம் யிருப்பினும்
பஞ்சமில்லை! பஞ்சமில்லை! பஞ்சமென்ப தில்லையே!

கொலை, கொள்ளை குற்றம் பெருகி விட்ட போதினும்
பஞ்சமில்லை! பஞ்சமில்லை! பஞ்சமென்ப தில்லையே!

தமிழக அரசு விற்கும் சாராயநீருக்கு துளியளவேனும்
பஞ்சமில்லை! பஞ்சமில்லை! பஞ்சமென்ப தில்லையே!

நன்றி

வாழ்க வளமுடன்

ரா.சிவகுமார்

எழுதியவர் : ரா.சிவகுமார் (6-May-13, 6:24 pm)
சேர்த்தது : siva71
பார்வை : 72

மேலே