..............புரிதலும் பிரிதலும்...........
என்னுடைய சில தவறுகளுக்குப்பின்,
மாறிப்போயின உன்னுடைய நடவடிக்கைகள் !
அணுவணுவாய் நேசித்தாய் !
அதை மறக்குமா மன்றாடும் மனது !
பரிட்சயமாயிருந்த பல பழக்கவழக்கங்கள்,
பட்டுப்போயின கொஞ்சம்கொஞ்சமாய் !
நான் நுகர்ந்தேன் ஜீரணிக்கயியலா கசப்பினை !
உன் அளவுக்கு என்னை புரிந்தவருமில்லை !
உன்னைப்போல் உணர்வினை பிரிந்தவருமில்லை !
புரிந்துவாழ்ந்தவள் பிரிந்துஅகல காரணமானேன் !
அதனினால் காய்ந்து தொங்கும் தோரனமானேன் !
சரி என்செய்வது ஒரு நம்பிக்கையை தோற்றுவித்தேன் !
துவண்டுபோய் தொலைந்த எனக்குள் !
சிறிதுசிறிதாய் எனை மன்னித்து ஏற்பாய் என்றேனும் !
அரவணைப்பாய் முழுமையாய் அன்றேனும் !
அதுவரை தரிசிக்கலாம் உனை உன் பாதையில் நின்றேனும் !
என நம்பிக்கையில் நசிந்து.................................................
அங்குலம் அங்குலமாக பிரிந்து,
பந்தபாசமெல்லாம் மறந்து,
எனை எவனென்றே தெரியாமல் துறந்து,
நானற்ற நீயாய் நீ இறந்துபோகலாம் !
எனும் உனது கொடிய முடிவை அறிந்திறாமல் !!