உடலினைப் போற்றுவோம் [3]
செவி -- தெரிந்ததும் அறிந்ததும்
*************************************************
1.காது
**********
நமது பண்பாட்டிலும் அன்றாட பயன்பாட்டிலும் நம்முடன் இணைந்து இன்று வரை தொடர்ந்து வரும் பழக்கமான அணிகலன்களை அணிந்து கொள்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
அதாவது நகைகளை அணிந்து கொள்வது என்பது ஆடம்பரத்திற்கு மட்டும் இல்லாமல் அது ஒரு அவசியமான உடல் இயக்க மற்றும் உணர்வு தூண்டல் கருவிகளாகவே பயன்பட்டு வந்திருக்கிறது., வருகிறது என்பதே உண்மை.
பழங்காலத்தில் ஆப்பிரிக்க மக்கள் உடம்பின் சில பாகங்களை நெருப்பால் சுட்டுக்கொண்டனர். காதுகளில் நெருப்புச் சூட்டால் துளைகளை இட்டுக் கொண்டனர். அவர்கள் சில வலையங்களை கொடிகளாலும்., வேர்களாலும் அணிந்து கொண்டனர்.
நமது பாட்டிகள் கூட காதுகளில் பல இடங்களில் நகைகளை அணிந்து இருந்தனர். இப்போதைக்கு நகைகள் அணிவது நாகரீகம் என்ற அளவில் பயன்பாட்டில் இருந்தாலும் அது அறிவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நமக்கு பல வகைகளில் நன்மையே செய்கிறது என்றால் அது மிகையல்ல.
காதில் முன்பெல்லாம் கிட்டத்தட்ட குறைந்தது ஐந்து தோடு போட்டிருந்தவர்கள் உண்டு. அத்தனையும் அவசியமான இடங்கள் [மருத்துவ முறையில் சொன்னால் “புள்ளிகள்-points] ஆகும். அவை நமது உடம்பிற்கு நன்மைகளையே செய்தன. காது குத்துவது என்ற விழாவின் சிறப்பை வைத்து நாம் காதின் அடிப்பகுதியில் துளையிடுவதன் முக்கியத் துவத்தை அறியலாம். அந்தப் பகுதியில் அணிந்த ஏதேனும் ஒரு நகை அல்லது தண்டு அல்லது சிறு குச்சி போன்றவை தூண்டுதலை ஏற்படுத்திக் கொண்டே இருப்பதால் நினைவுத்திறனை அதிகரிக்கிறது என்பதை அறிகிறோம்.
அதனால்தான் பெண்கள் அதிக நினைவாற்றலுடன் சுறுசுறுப்புடனும் சோர்வடையாமலும்
திகழ்கிறார்களோ?!!
முக்கிய தகவல் ஒன்றினை பார்ப்போம். அதாவது காதை நன்றாக உற்றுக் கவனியுங்கள்., அது ஒரு குழந்தை தலைகீழாக சுருண்டு படுத்து இருப்பதைப் போன்று அமைந்திருப்பதை பார்க்கலாம். இன்னும் சொல்லப் போனால் கர்ப்பத்தில் குழந்தை இருப்பதைப் போன்று இருப்பதைக் காணலாம். இதிலிருந்து நாம் ஒரு முக்கிய செய்தியை அறிய முடிகிறது. அது., மனிதனின் உடல் பகுதி முழுமையும் காதுடன் தொடர்பு கொண்டிருப்பதையும், காதில் அனைத்து உடல் பாகங்களுக்கும் உண்டான நோய் அடையாளத்தை உறுதிப் படுத்த முடியும் என்பதையும் தெளிவுடன் அறிகிறோம்.
காதைப் பிடித்து தோப்புக்கரணம் போடுவதை சமயச் சடங்கு என்று ஒதுக்கி வைக்க போராடுகிறோம். இதையே அமெரிக்காவில் யோகாவின் ஒரு பகுதியாக தோப்புக்கரணம் புகுத்தபட்டு பல ஆயிரம் ரூபாயை கட்டணமாக நிர்ணயிக்கின்றனர். தனது கண்டுபிடிப்பு என்று உரிமை கேட்கின்றனர். இது நம்மை விட்டு மறைந்தால் போதும் என்று கவலைப் படுகிறோம். ஆற்றங்கரை மேட்டில் பிள்ளையாருக்கு முன்னால் பத்து பைசா செலவில்லாமல் தோப்புக் கரணம் போடுவதற்கு கிண்டல் செய்கிறோம்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் தோப்புக்கரணம் போடச்சொல்வது தண்டனை தரும் விசயமாகத் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் அது ஒரு நினைவூட்டல் செய்லென்று நாம் அறிய மறந்து விட்டோம். ஆம் காதை பிடித்து தொங்கும் போது காதின் அடிப்பகுதியான மென்மையான சதைப்பகுதியில் உள்ள உணர்வு நரம்புகள் அழுத்தப் பட்டு மூளைக்குச் செய்தியை அனுப்பி மறந்து போன படிப்பை அல்லது செயலை ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது என்பதே உண்மை. ஆசிரியர் காதைப் பிடித்து திருகுவதும் இதற்காகத்தான் இருந்திருக்கும். ஆனால் இன்று மாணவனை ஆசிரியர் அடித்து விட்டால் ஆசிரியரின் காதையே கடித்து துப்பி விடுவார்கள் மாணவர்களே.
நமது சமுதாயத்தில் கணவன் இறந்தால் மனைவி அனைத்து அணியகலன்களையும் தவிர்ப்பதையும், மனைவி இறந்தால் கணவன் அணிகலன்களை தவிர்ப்பதையும் பார்த்திருக்கிறோம். இதன் காரணமாக., நமது உடம்பின் ஆசை பற்று உணர்வுத் தூண்டுதல் ஆயகியவற்றை முற்றும் துறப்பதற்காக எனப்படுவதாக அறிகிறோம். [இப்பொழுது ஆண்கள் அவ்வளவுக்கு அதிகமாக அணிகலன்களை அணிவதில்லை.]
காரணமின்றி நமது முன்னோர்கள் எதையும் கற்பிக்கவில்லை. காரணமின்றி எதையும் பின்பற்றவில்லை என்பத முழுமையாய் நம்புவோமாக !!
*********************************************
நன்றி; நான் அறிந்த இயற்கை மருத்துவம்