புள்ளிகள் போடும் கோலம்---******ஆவாரம் பூ******

புள்ளிகள் போடும் கோலத்தால்
அவை ஆடும் ஆட்டத்தால்
அழிந்து போகிறது பல நல்ல
வண்ண கவி கோலங்கள்...

கவிஞர்கள் பலவும்
காணாமல் போகிறார்கள்
இவைகள் நடத்தும் நாடகத்தால்..

சில புள்ளிகள்
போலி கணக்குகளை கொண்டு
கொண்டாடுகின்றன..
இதனால் பலர் திண்டாடுகின்றன...

புள்ளிகள் தேவையே அவை
ஓரிடம் மட்டுமே
நிலைத்து நின்று விடக்கூடாது..

கோலமிடத்தான்
புள்ளிகள் வேண்டுமே தவிர
புள்ளிகளுக்காக கோலமிட்டு
பல அழகிய கோலங்களை
அலங்கோலமாக்க கூடாது.....


***ஆவாரம் பூ***

எழுதியவர் : ***ஆவாரம் பூ*** (6-May-13, 8:52 pm)
சேர்த்தது : ஆவாரம் பூ
பார்வை : 175

மேலே